1. Home
  2. தமிழ்நாடு

10-ம் வகுப்பு மாணவியைத் தியேட்டருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை..!

1

உளுந்தூர்பேட்டை தாலுகா பொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் உத்திரகுமாரன், கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த வேலை காரணமாகக் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் பள்ளி சீருடை மற்றும் புத்தகப் பையுடன் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த உத்திரகுமாரன், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விருத்தாசலத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கு வைத்து மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மாணவியைக் காணவில்லையெனப் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் மாணவியைப் போலீசார் தேடினர். இதையடுத்து மாணவியை உத்திரகுமாரன் வீட்டிற்கு அழைத்து வந்தார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உத்திரகுமாரனை பிடித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்திரகுமாரனை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like