1. Home
  2. தமிழ்நாடு

10ம் வகுப்பு கணித தேர்வு தேதியை மாற்ற வேண்டும் : வலுக்கும் கோரிக்கை..!

1

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். அதன்படி 10ம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23ம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை: மார்ச் 26ம் தேதி தமிழ், 28ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 1ம் தேதி கணிதம், ஏப்ரல் 4ம்தேதி அறிவியல், ஏப்ரல் 8ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு கணித தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தேர்வுக்கு முன்பு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வர உள்ளதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Trending News

Latest News

You May Like