10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேதி அறிவிப்பு..!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளன. குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி 86.38%, திருவள்ளூர் 86.52%, திருவண்ணாமலை 86.10%, ராணிப்பேட்டை 85.48% ஆகிய மாவட்டங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
இந்நிலையில்10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள்,தோல்வியை கண்டு துவண்டு விடாமல், விடாமுயற்சி செய்தால் வெற்றிபெற முடியும். எனவே, தோல்வியடைந்த மாணவர்களுக்கு. ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் தோல்வியடைந்த மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.