1. Home
  2. தமிழ்நாடு

வெளியாகிறது 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…!! அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Q

தமிழகத்தில் 11 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5 தேதி தொடங்கி ஏப்ரல் 15 தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு தாள்களை திருத்தும் பணியானது நடைபெற்று வந்தது. தற்போது, இப்பணிகள் விரைவாக முடிந்ததால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை போலவே, 11 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 11 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19 வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், இந்த முடிவுகள் 3 நாள் முன்னதாக, அதாவது நாளை மறுநாள் (மே 16) வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும், 10 வகுப்பிற்கு காலை 9 மணிக்கும், 11 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Q

Trending News

Latest News

You May Like