1. Home
  2. தமிழ்நாடு

பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிதடி மோதல்...!

Q

சென்னை அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் நாள்தோறும் வேலைக்கு சென்றுவர பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் வந்து நின்றது. அங்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயிலுக்குள் ஏறத் துவங்கினர்.

அப்போது மின்சார ரயிலில் பயணம் செய்த மாநில கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ரயிலில் ஏறக்கூடாது எனத் தடுத்து நிறுத்தினர். இதனால் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரயிலுக்குள் அடிதடி மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், அங்கிருந்த கருங்கற்களை ரயில்மீது வீசியெறிந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கு ரயில்வே போலீசார் வருவதை பார்த்ததும், இருதரப்பு கல்லூரி மாணவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் கூறுகையில், சென்னை நகரில் பல்வேறு கல்லூரிகள் இருந்தாலும், பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி அடிதடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பு கல்லூரி மாணவர்களையும் பலமுறை எச்சரித்தும் அடிதடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தாக்குதலில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று அந்தந்த கல்லூரி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக மேலும் 10 பேரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர் என்றார்.

Trending News

Latest News

You May Like