1. Home
  2. தமிழ்நாடு

குடிமகன்கள் ஷாக்..! வரும் 10ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

1

தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

இந்த நிலையில், வருடத்தின் முக்கிய நாட்களில் மது கடைகள் மற்றும் அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வரும் பார்கள், பப்புகள் மூடப்படுவது வழக்கம். அதாவது, குடியரசு தினம் , சுதந்திர தினம், அக்டோபர் 2, வள்ளலார் தினம் , தொழிலாளர் தினம் உள்ளிட்ட நாட்களில் மூடப்படும்.குறிப்பாக இந்த நாட்களில் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படாத வகையில் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மகாவீர் ஜெயந்தி வருகிற மார்ச் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் இருக்கத் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like