பாசிஸ்டுகளின் இந்த அடக்குமுறை குடிமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் : அமைச்சர் உதயநிதி..!

அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
பாராளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பாசிஸ்டுகள் எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து கொடூரமான வழிகளையும், முயற்சிகளையும் பயன்படுத்துகின்றனர்.
பாசிஸ்டுகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நமது தேசத்தின் குடிமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 2024 மக்களவை தேர்தலில் மக்கள் உறுதியாக செயல்பட்டு பாசிஸ்டுகளை தூக்கி எறிவார்கள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
I strongly condemn the arrest of @JmmJharkhand leader and crucial ally of our #INDIA alliance, Thiru @HemantSorenJMM.
— Udhay (@Udhaystalin) February 1, 2024
With the parliamentary elections around the corner, the anxious fascists are employing all possible atrocious means and efforts to constrain the activities of…