1. Home
  2. தமிழ்நாடு

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் காலமானார்..!

Q

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும் பிரபல மலையாள இயக்குநருமான சங்கீத் சிவன்(61) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர், ஹிந்தி, மலையாளத் திரைப்படத் துறையில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார்.

மும்பையில் வசித்து வந்த சங்கீத் சிவன், நெஞ்சுவலி காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மே 8) இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அவரின் சகோதரர் சந்தோஷ் சிவன், ஆங்கில ஊடகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like