திரையரங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாராளுமன்ற ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.