கிறிஸ்தவ மதபோதகர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்!

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின்பேரில், ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜான் ஜெபராஜ் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ‘நானும், மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தூண்டுதலின்பேரில் சிறுமிகளை வைத்து எனக்கு எதிராக பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளி்க்க தயாராக இருக்கிறேன். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்'’ என்று அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.