மைதானத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட கிறிஸ் கெயில் !

அபுதாபியில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 99 ரன்களை குவித்தார்.
போட்டியின் கடைசி ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தில் போல்ட்டான கெயில் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.இதனால் அவர் ஆக்ரோஷத்தில் மைதானத்தில் பேட்டை தூக்கி எறிந்தார். பின்னர் ஆர்ச்சருக்கு வாழ்த்தும் கூறினார். இதனால் பஞ்சாப் அணி 185 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் அதிரடி காட்டினர். ஸ்டோக்ஸ், சாம்சன், உத்தப்பா, ஸ்மித், பட்லர் என வீரர்கள் குறைந்த பந்துகளில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
அபாரமான ஆட்டத்திற்கு பிறகு பேசிய கெயில், 180 ரன்கள் நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட் விளையாட நன்றாக உள்ளது. இரவில் விளையாட சூப்பராக இருக்கும். 99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சி தான்.
1000 சிக்ஸர்களை அடித்தது ஒரு ரெக்கார்டாக உள்ளது. 41 வயதிலும் பவர் ஹிட் செய்வதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். அதற்கு நன்றி சொல்ல வேண்டும். நான் சதம் அடிக்க வேண்டுமே என விரும்பியவர்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னிக்கவும். நான் இன்று அதை மிஸ் செய்து விட்டேன். இருந்தாலும் என் மனதில் அதனை சதமாகவே பார்க்கிறேன் என கெயில் கூறினார்.
newstm.in