1. Home
  2. தமிழ்நாடு

சித்திரை அமாவாசை : இன்று முன்னோர்களுக்கு திதி செய்வதால்...

1

பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள் இந்த சித்திரை அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளுக்குச் சென்று மறைந்த, தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். போக முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முன்னோர்களது வழிபாட்டை எப்படி சுலபமான முறையில் செய்வது எப்படி என தெரிஞ்சிக்கலாம் வாங்க 

உங்களுடைய வீட்டில் இறந்தவர்களின் திருவுருவப் படத்தை சுத்தமாகத் துடைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து முடிந்தால் துளசி மாலை, இல்லையென்றால் கிடைத்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து, அவர்களுக்கு படைத்துவிட்டு, அதன் பின்பு அந்த உணவோடு கொஞ்சமாக கருப்பு எள் சேர்த்து காகத்திற்கு வைத்துவிட வேண்டும். இந்த வழிபாட்டை காலை 12 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதன் பின்புதான் வீட்டில் இருப்பவர்கள் உணவு அருந்த வேண்டும். காலையிலிருந்து வெறும் நீராகாரத்தை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதேபோல் அமாவாசை தினத்தில் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு மறக்காமல் திருஷ்டி கழித்து விட வேண்டும்.

உங்கள் வீட்டு வழக்கப்படி கல் உப்பை வைத்து திருஷ்டி கழித்தாலும் சரி, எலுமிச்சம் பழத்தை வைத்து திருஷ்டி கழித்தாலும் சரி, அல்லது ஆரத்தி, பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் நாளை திருஷ்டி கழிக்கும் போது கண் திருஷ்டி முழுமையாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 

தமிழ் ஆண்டின் முதல் அமாவாசையான சித்திரை அமாவாசை பல சிறப்புகளை கொண்டது. சித்திரை அமாவாசை அன்று அதிகாலையே அருகில் உள்ள குளக்கரை அல்லது ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி செய்வதால் முன்னோர்களினால் ஏற்பட்ட பாவங்களில் இருந்து நம்மை விடுவித்து காரியத்தடைகளை நீக்கும்.

அன்றைய தினம் விரதமிருந்து கருப்பு, வெள்ளை எள் கலந்த சாதம் காக்கைக்கு வைப்பதால் பலன் உண்டாகும். சித்திரை அமாவாசை நாளில் தொழில் நிறுவனங்கள், கடைகள் வைத்திருப்போர் பூசணிக்காயை வாங்கி திருஷ்டி சுற்றி உடைத்தால் கடை மீது உள்ள திருஷ்டி, கெட்ட கண்கள் நீங்கி வியாபாரம் நல்ல நிலையை அடையும்.

சித்திரை மாத அமாவாசை வழிபாட்டினால் நீண்ட காலமாக திருமண வரன் வேண்டுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். வேலை இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், குழந்தை வரன் வேண்டுபவர்களுக்கு குழந்தை வரனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Trending News

Latest News

You May Like