ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் நடிகர் சிரஞ்சீவி!
ராமர் கோவிலின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி நாடு முழுவதிலிருந்தும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அயோத்திக்கு புறப்பட்டார்.
தற்போது நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி மற்றும் மகன் ராம் சரணுடன் இன்று காலை அயோத்திக்கு புறப்பட்டார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிரஞ்சீவி, “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஹனுமானே இந்த விழாவிற்கு என்னை நேரில் அழைத்தது போல் உணர்கிறேன். இந்தப் பிரதிஷ்டை நிகழ்வை காண நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து பேசிய ராம்சரண், “இது ஒரு நீண்ட கால காத்திருப்பு. ராமர் கோவிலுக்கு செல்வதை நாங்கள் கௌரவமாக உணர்கிறோம்” என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், நடிகர் பவன் கல்யாண், நடிகை கங்கனா ரனாவத், பாடகர் சங்கர் மகாதேவன், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.