கின்னஸ் உலக சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி..! என்ன சாதனை தெரியுமா ?
நடிகர் சிரஞ்சீவி செய்துள்ள சாதனை குறித்த தகவல் பற்றி வெளியாகி இருக்கிறது.143 திரைப்படங்களில் 537 பாடல்களுக்கு சிரஞ்சீவி நடனமாடி இருக்கிறார். அதில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்புகள் இருப்பது தான் தற்போது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.
Most prolific star in Indian film industry என சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதற்கு இந்திய சினிமா துறையில் மிகவும் திறமையான நட்சத்திரமாக சிரஞ்சீவியை தேர்வு செய்திருக்கிறது.