1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் சாலையோர வியாபாரிகளுக்கு சிப் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்..!

1

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலனை காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் நலத் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சாலையோர வியாபாரிகளுக்கு சிப் மற்றும் QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் நடைபெற உள்ளது. சாலையோர வியாபாரிகள் ஆதார் அட்டை மற்றும் தங்களது மொபை போன் உடன் முகாமில் பங்கேற்று அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமானது 22.11.2024 முதல் 30.11.2024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக 22.11.2024 முதல் 30.11.2024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like