1. Home
  2. தமிழ்நாடு

எல்லையில் 2 கி.மீ பின்னால் சென்ற சீனப் படைகள் ! - தொடரும் ஆய்வுப்பணி...

எல்லையில் 2 கி.மீ பின்னால் சென்ற சீனப் படைகள் ! - தொடரும் ஆய்வுப்பணி...


இந்தியாவுக்கு எப்போதும் எல்லை பிரச்னை அளித்து வருவது பாகிஸ்தான். ஆனால் சமீப காலமாக சீனாவும் எல்லைப் பிரச்னையில் இந்தியாவை சீண்டுகிறது. 

அந்த வகையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன படையினருக்கும் உயிரிழப்புகள் அதிகம், ஆனால் சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.  

எல்லையில் 2 கி.மீ பின்னால் சென்ற சீனப் படைகள் ! - தொடரும் ஆய்வுப்பணி...

இதனையடுத்து  எல்லையில் பதற்றம் அதிகரித்த நிலையில் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருநாட்டு படைகளும் திருப்பபெறப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் வீரர்கள் குவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஜூன்30ஆம் தேதி கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தைகள் இருதரப்புக்கும் இடையே நடந்தன. இந்த பேச்சுவாரத்தைகளில் சீனா மேற்கொண்ட வாக்குறுதிகளின் மீது செயல்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

எல்லையில் 2 கி.மீ பின்னால் சென்ற சீனப் படைகள் ! - தொடரும் ஆய்வுப்பணி...

அப்போது, கல்வான் பள்ளத்தாக்கில் சண்டை நடந்த இடத்திலிருந்து 2 கிமீ தூரம் சீனப் படைகள் பின்னால் சென்றுவிட்டது. இது தொடர்பாக அந்த இடத்துக்கே சென்று சரிபார்க்கப்பட்டது என்று மூத்த இந்திய அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்தார்.

அதேநேரத்தில், கல்வான், பங்காங் ஸோ, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்கள் மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்ட தேப்சங் சமவெளிகள் பகுதிகளை பார்வையிட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

newstm.in 

Trending News

Latest News

You May Like