1. Home
  2. தமிழ்நாடு

திருமண வயதை குறைக்க சீன அரசு திட்டம்!

1

சீனாவில் குழந்தைப் பிறப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை முற்றிலும் தளர்த்துவதற்கான பரிந்துரையைச் சமர்ப்பிக்கவிருப்பதாக தேசிய அரசியல் ஆலோசனைக் குழுவான ‘சிபிபிசிசி’யின் உறுப்பினர் சென் சாங்ஸி தெரிவித்தார்.

திருமணம், குழந்தைப் பிறப்பு ஆகியவற்றுக்கான ஊக்குவிப்புத் திட்டத்தை உருவாக்கவும் அந்தப் பரிந்துரை வழிவகுக்கும்.

சீனாவில் அடுத்த வாரம் நடைபெறும் வருடாந்தர நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்பாக அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன. அந்தக் கூட்டத்தில், சரியும் மக்கள்தொகைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளை அதிகாரிகள் அறிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் தற்போது சட்டபூர்வ திருமண வயது ஆண்களுக்கு 22. பெண்களுக்கு அது 20ஆக உள்ளது.


ஒப்புநோக்க, பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் சட்டபூர்வ திருமண வயது 18ஆக உள்ளது. எனவே அனைத்துலக விதிமுறைகளுக்கு ஏற்ப சீனாவிலும் அந்த வயது வரம்பு அமைந்திருக்க வேண்டும் என்கிறார் திரு சென்.

இந்நிலையில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18-ஆக குறைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

குழந்தை பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான சீனர்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like