புதிய பேட்டரியை உருவாக்கி அசத்தியுள்ள சீன நிறுவனம்..! 10 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும் 400 கி.மீ. கார் ஓட்டலாம்..!

சீனாவை சேர்ந்த CATL நிறுவனம் உலகின் முதல் 4C சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் LFP பேட்டரியான ஷென்ச்சிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த பேட்டரியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இது 10 நிமிட சார்ஜ் மற்றும் ரேஞ்சுடன் 400 கிமீ ஒட்டும் திறன் கொண்டது.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கி.மீ. தூரம் ஒட்டும் திறன் கொடுக்கும் இந்த பேட்டரி.இந்த புதிய Shenxing EV பேட்டரி வேகமாக சார்ஜ் ஆவதால் இனி பேட்டரி வாகனம் சந்தையில் புதிய அடி எடுத்து வைக்கும். என எதிர்பார்க்கப்படுகின்றது
இந்த Shenxing EV பேட்டரி அதிவிரைவு சார்ஜிங், அதிக ஆற்றல் அடர்த்தி மற்றும் உயர் மட்ட பாதுகாப்பை ஒரே நேரத்தில் ஆக்கப்பூர்வமான முறையில் அடைகிறது.