ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற சீனா..!
ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு போட்டியில், சீனாவின் ஷெங் லிஹாவோ & ஹுவாங் யூடிங் ஆகியோர் தென் கொரியாவின் கியூம் ஜி-ஹியோன் & பார்க் ஹா-ஜூன் ஜோடியை 16-12 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். இதில் கஜகஸ்தான் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்தியாவின் ரமிதா & அர்ஜுன் பாபுதா இணை 6வது இடத்தை பிடித்தது.