1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்துக்கே சீனா பிரச்னையாக உள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்..!

1

புதுடில்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் : பல வழிகளில் சீனா பிரச்னையாக உள்ளது. அந்நாட்டின் தனித்துவமான அரசியல், பொருளாதாரமே இதற்கு காரணம். அதன் தனித்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால், அங்கிருந்து வரும் தீர்வுகள், முடிவுகள் அனைத்தும் சிக்கலானதாக இருக்கும். வர்த்தகத்தில் சீனா அனுபவித்த நன்மைகளை கவனத்தில் கொள்ளாததால் பலர் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறை பற்றி புகார் செய்கிறார்கள்.

சீனாவை பற்றி நாம் மட்டும் விவாதிக்கவில்லை. ஐரோப்பா கண்டத்தில் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு என அனைத்திலும் சீனாவை பற்றி மட்டுமே விவாதிக்கின்றனர். அந்நாட்டுடன் அமெரிக்கா பல வழிகளில் மோதி வருகிறது. எனவே, உண்மையில் இந்தியாவுக்கு மட்டும் சீனா பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும், உலகிற்கும் சீனா ஒரு பிரச்னையாக உள்ளது.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

Trending News

Latest News

You May Like