1. Home
  2. தமிழ்நாடு

சீனா, தென்கொரியா, நார்வே உட்பட 9 நாடுகளுக்கு விசா இலவசம் - சீனா அறிவிப்பு..!

1

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்று கொள்ளலாம்.  அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.இதேபோல் நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. 

தென்கொரியா, நார்வே, பின்லாந்து , ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சீனாவிற்குள் வணிகம், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை தான் அமலில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like