1. Home
  2. தமிழ்நாடு

இனி 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் செல்போன்களை பார்க்க தடை..!

1

2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத் துறை பெற்றோருக்கு தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு முதல் 12 வயதுக்கு உள்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 13 வயது முதல் 18 வயது வரையிலானோர் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் சுகாதாரத் துறை குறிப்பிட்டிருக்கிறது.

அதிக நேரம் குழந்தைகளை தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க விடுவதால், அது அவர்களது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி விடுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள 13 முதல் 16 வயதுடைய இளம் தலைமுறை பிள்ளைகள் ஒரு நாளைக்கு 6 முதல் அதற்கும் அதிகமான நேரம் செல்போனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like