இனி சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பார்க்கத் தடை..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சமூகவலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். சமூகவலைதளத்தில் கணக்கு இல்லாதவர்களைக் காண்பதே அரிது. இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பார்க்கத் தடை விதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்’ என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்தார்.
“16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பார்க்கத் தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்தச் சட்டம் 12 மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இந்த ஆண்டு பார்லிமென்டில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்” என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்க முன்மொழிந்தது. இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் தடையைத் தவிர்க்க முடிந்தது.பல நாடுகள் ஏற்கனவே கடுமையான சட்டத்தின் மூலம் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன.
இதனால், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதளங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. குழந்தைகள் அதிக நேரத்தை வீணாகச் செலவு செய்கின்றனர். பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற பயனர்களுக்கு விதிவிலக்குகள் இருக்காது. இவ்வாறு ஆஸ்திரேலியா பிரதமர் உரையாடினார்