முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு !
சேலம் அடுத்துள்ள ஆத்தூர் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புக்கு வரும் அதிவிரைவுப் படை வாகனம் மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம். ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் கடந்த 18- தேதி, சேலத்தில் இருந்து சென்னை சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரது கார் முன்னே, சேலம் சரக பாதுகாப்பு அதிவிரைவுப்படை வாகனம் முன்னால் சென்றது. அப்போது யாரும் எதிர்பாரத வகையில், கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற 4 பேர் படுகாயமடைந்தனர், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த செளந்தரம் (65) என்கிற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.