அக்.13 முதல் இந்த மாவட்டங்களில் முதல்வர் பயணம் !!

தமிழகத்தில் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 6.4லட்சம் பேர். பாதிப்பை நேரில் ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கவும், மக்களின் துயரைப் போக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டமாகவும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யவும் அக்டோபர் 13ல் தூத்துக்குடி மாவட்டத்திலும்,14 ம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் செல்ல இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு முறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.