முதலமைச்சர் வீடு , தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு !! மக்கள் அதிர்ச்சி

முதலமைச்சர் வீடு , தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு !! மக்கள் அதிர்ச்சி

முதலமைச்சர் வீடு , தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு !! மக்கள் அதிர்ச்சி
X

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை 603 ஆக இருக்கிறது. 42 பேர் குணமாகியுள்ளனர். அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் , குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

அங்குள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து நாள்தோறும் டிஜிபி கவுதம் சவாங், முதன்மைச் செயலாளர் நீலம் சஹானி உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் வீடு அருகே உள்ள பழைய டோல்கேட் மாருதி அபார்ட்மென்டில் வசித்து வந்த 62 வயது மூதாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

ஆனால் 2 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். இதையடுத்து இறந்த மூதாட்டிக்கு ரத்த பரிசோதனை செய்ததில் அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது நேற்று தெரியவந்தது இதனால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

முதலமைச்சர் வீட்டின் அருகே வசித்து வந்த மூதாட்டி கொரோனாவால் இறந்ததால், முதலமைச்சர் வீடு அமைந்துள்ள அந்த பகுதி முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது

Newstm.in

Next Story
Share it