முதலமைச்சரின் தந்தை உடல் நலக் குறைவால் மரணம் !!

முதலமைச்சரின் தந்தை உடல் நலக் குறைவால் மரணம் !!

முதலமைச்சரின் தந்தை உடல் நலக் குறைவால் மரணம் !!
X

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் இன்று காலமானார். டெல்லியின் எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. எனினும் உடல் நிலை மோசமடைந்ததால் மார்ச் 15 அன்று எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனந்த் சிங் பிஷ்ட் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார் மற்றும் இரைப்பை நோயியல் துறையின் கீழ் மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்த பிறகு, ஆதித்யநாத்தின் தந்தை வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு நேற்று டயாலிசிஸ்ம் மேற்கொண்டார். எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய தகவல்களின்படி, அவர் மார்ச் 15 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் , சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். யோகி ஆதித்யநாத்தின் தந்தை இறப்புக்கு பல தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it