1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் சிக்கல்.. அதிமுக எம்எல்ஏக்கள் 6ஆம் தேதி சென்னை வர உத்தரவு !

முதல்வர் வேட்பாளர் சிக்கல்.. அதிமுக எம்எல்ஏக்கள் 6ஆம் தேதி சென்னை வர உத்தரவு !


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளன. விரைவில் சசிகலாவும் சிறையில் இருந்து வெளிவர இருப்பதால், அ.தி.மு.க.வில் இப்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாகவே அமைச்சர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை கூற, பல மாவட்டங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் போஸ்டர்கள் மூலம் பிரச்னையை உருவாக்கினர். இந்த பிரச்னை சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் எதிரொலித்தது.

முதல்வர் வேட்பாளர் சிக்கல்.. அதிமுக எம்எல்ஏக்கள் 6ஆம் தேதி சென்னை வர உத்தரவு !

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதனை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் பலர் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் சிக்கல்.. அதிமுக எம்எல்ஏக்கள் 6ஆம் தேதி சென்னை வர உத்தரவு !

இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ஆம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் 7ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வர தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்தபிறகு முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like