முதலமைச்சர் பழனிசாமியுடன் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பு.. தாயார் மறைவுக்கு ஆறுதல் !

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயியம்மாள் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாரிகள், உறவினர்கள், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதலமைச்சர் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஸ்டாலினுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியும் சென்று மரியாதை செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.
newstm.in