1. Home
  2. தமிழ்நாடு

மாநாடு படத்தை தடை செய்யுங்க முதல்வர்... இல்லைனா பாஜக போரட்டம் நடத்தும்

மாநாடு படத்தை தடை செய்யுங்க முதல்வர்... இல்லைனா பாஜக போரட்டம் நடத்தும்


இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வன்முறையை தூண்டும் மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக பிரமுகர் பேசியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரையில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மாநாடு திரைப்படத்தில் காவல் துறையினரை தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கோவை குண்டு வெடிப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது. இந்து, முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக மாநாடு படம் அமைந்துள்ளது.

மத அடையாளங்கள் படத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. மாநாடு பட விவகாரத்தில் முதல்வர் தலையிட செய்ய வேண்டும், சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.

மாநாடு படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். படத்தை தடை செய்யவில்லை என்றால் பாஜக போராடும், மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுள்ளது.

முதல்வர் கையில் உள்ள காவல்துறை செயல்படாமல் உள்ளது. பாஜக புகாரில் காவல்துறை நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நகர்புற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். பொய் பிரச்சாரம் மூலம் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும்” எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like