1. Home
  2. தமிழ்நாடு

வரும் 15-ம் தேதி கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழகத்தில் இதுவரை சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே ஆசியாவிலே பிரம்மாண்ட நூலகமாக கருதப்பட்டது. தற்போது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமாக மதுரை புது நத்தம் சாலையில் சர்வதேச தரத்துடன் ரூ.114 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.99 கோடி நூலக கட்டிடத்திற்கும், ரூ.10 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கவும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 1 ஆண்டு 4 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழ் புத்தகங்கள், 2 லட்சத்து 75 ஆயிரம் ஆங்கிலப் புத்தகங்கள், 6 ஆயிரம் இ-புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டுநினைவு நூலகத்தில் பழங்காலஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தியிருப்பதைப் போல, இந்த நூலகத்திலும் பழங்கால ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பணிகள் முடிவுற்ற நிலையில், இரண்டரை லட்சம் புத்தகங்களுடன் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த நூலகத்தை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்கும் விதமாக விழா ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது.

நூலக கட்டிடம் அருகிலுள்ள மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழாவிற்கான மேடை, பந்தல் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே, மைதானத்திலுள்ள பார்வையாளர் கேலரி பகுதிக்கு முன்பு பகுதியில் மேடை அமைக்கப்படுகிறது. மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழா நடக்குமிடம், மைதானம், நூலக பகுதியில் முன்கூட்டியே வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நிறுத்தப்படுகின்றனர். கட்சியினரைவிட மாணவ, மாணவிகள் அதிகமாக பங்கேற்க திட்டமிடுபடுகிறது.

இதனிடையே, முதல்வர் வருகை மற்றும் விழா நடக்கும் பகுதியிலும் எவ்வாறு பாதுகாப்பு மேற்கொள்வது என பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like