1. Home
  2. தமிழ்நாடு

பெரும் வேதனையில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.10 லட்சம் நிதியுதவி!

1

நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெகன்குமார் என்பவர், சென்னை சின்னமலைப்பகுதியில் தங்கி மாநகரப் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார். எம்.கே.பி. நகர் முதல் கோயம்பேடு நோக்கி செல்லும் பேருந்தில், அவர் பணியில் இருந்தபோது, அமைந்தகரை அருகே பயணி ஒருவருடன் டிக்கெட் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட, டிக்கெட் மிஷினைக் கொண்டு பயணியை, நடத்துநர் ஜெகன்குமார் தாக்கியதாகவும், பதிலுக்கு பயணி திருப்பி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்து ஜெகன்குமார் உயிரிழந்தார்.

இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் நேற்றிரவு பயணி உடனான மோதலில் கீழே விழுந்து மரணமடைந்த மாநகரப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 24.10.2024 இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் திரு.ஜெ.ஜெகன் குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் திரு.C.ஜெகன்குமார் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முடஹ்லாமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1
 

Trending News

Latest News

You May Like