மோடி தலைமையிலான அரசுக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள் - முதலமைச்சர் நவீன் பட்நாயக்..!

ஒடிஷா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நவீன் பட்நாயக், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் ஊழல் குறைவாகவே உள்ளது. வெளிநாடுகளுடனான கொள்கைகள், பாராட்டுத்தகுந்த வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை தான் ஆதரிப்பதாகவும், அதற்கு தயாராகி வருவதாகவும் நவீன் பட்நாயக் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் வளர்ச்சியே தனக்கு பிரதானம் என்றும், இதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வருவதாகவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 10- க்கு 8 மதிப்பெண்கள் தருவதாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.