1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!!


கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“சகிப்புத்தன்மையையும், அகிம்சையையும், உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசு பிரான் பிறந்தநாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகின்றனர்.

மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடப்படும் இந்த விழாவை கொரோனா காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like