1. Home
  2. தமிழ்நாடு

ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தாகூர் சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

11

2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், இந்தியத் திருநாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை, இராணி மேரி கல்லூரியில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் திருவுருவச் சிலையை நேற்று முதல்வர் திறந்து வைத்து, அவரது திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த   திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு,  பொன்முடி, எ.வ. வேலு,  மு.பெ. சாமிநாதன்,  ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,  மா. சுப்பிரமணியன்,  பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு, பரந்தாமன், பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ்குமார், கோயம்புத்தூர் முன்னாள் மாநகராட்சி மேயர் வெங்கடாசலம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like