இன்று சிவாஜி சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (1.10.2024) காலை 10.00 மணியளவில், சென்னை அடையார், தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் கூடிய புகைப்படக் கண்காட்சியும் இம்மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.