ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்பநபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதனை அடுத்து ஆழ்வார்பேட்டை காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வீட்டு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதே போல் தமிழகவெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.