கழக நிர்வாகிகளோடு கேக் வெட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், கழக நிர்வாகிகளோடு நம் தலைவர் அவர்கள் கேக் வெட்டி மகிழ்ந்த தருணத்தில் உடனிருந்தோம்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் – நம் உரிமைகளை காத்திடவும் உறுதியுடன் செயல்படுதே நம் ஒரே இலக்கு என்று நம் தலைவர் அவர்கள் தலைமையில் உறுதிமொழியேற்றோம்.
#தமிழ்நாடு_போராடும்!
#தமிழ்நாடு_வெல்லும்!