1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு..!

1

 தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அக்டோபர் 3, 4-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.   

 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம், ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொள்கிறார். 

கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகள், திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like