முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி..!
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா வட இந்தியர்கள் வெள்ளையர்கள் போன்றும், தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது "நாட்டு மக்களை அவர்களுடைய நிறங்களால் அவமதிப்பதை நாடு பொறுத்துக் கொள்ளாது. இதை மோடி ஏற்றுக் கொள்ளமாட்டார்" எனத் தெரிவித்திருந்தார்.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது சாம் பிட்ரோடா, தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்று உள்ளனர் என கூறியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:-
தமிழர்களின் பெருமையை பற்றி பேசும் தி.மு.க. தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ளுமா?. கூட்டணியை முறிப்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கிறதா?. பிரித்தாள்வதுதான் காங்கிரஸ் கட்சியின் மனநிலையாக மாறி வருகிறது. என் நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.