திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை பலமாக வீசி கொண்டிருக்கிறது. மதவாத பாஜக அரசை வீழ்த்தவே இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளோம். மாநில உரிமைகளை மதிக்காத அரசு மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா நம் வசம்தான். ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியை பெறுவோம்.தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்றும் கடமையையும் திமுக தோள்களில் சுமக்கிறது. மாநிலங்கள் என்ற கூட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கை கெண்டவர்களின் ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது.
பன்முகத்தண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல.. நாட்டு மக்களின் விடுதலைக்காக!சிஏஜியால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவின் கைகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.",