வரும் அக்.30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார்..!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வருகிற 30 -ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து அக்., 29ம் தேதி விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின், 30ம் தேதி காலையில் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார். மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்லும் முதல்வர், அங்கு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.