1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணம்..!

1

நாளை (ஆக.24-ம் தேதி) காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து நாகப்பட்டினம் சென்று இரவு தங்குகிறார். ஆக. 25-ம் தேதி திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பிறகு, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஆக.26-ம் தேதி முதல்வர் கள ஆய்வு திட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 27-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சென்னை திரும்புகிறார்.

Trending News

Latest News

You May Like