1. Home
  2. தமிழ்நாடு

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பள்ளி சிறுவன் நெகிழ்ச்சி..!

1

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவனான சந்தோஷ் முயற்சித்துள்ளார்.ஆனால், அந்த சிறுவனால் முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை; அதனால் ஏமாற்றமடைந்த சிறுவன், தனது தாயிடம் ஆதங்கப்பட்டுள்ளார்.

மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய தாய், நிகழ்ச்சி முடிந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலையில், காத்திருந்தது தனது மகனின் ஆசையை அதிகாரிகளின் உதவியுடன், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளார். அதனையடுத்து, இரண்டாவது நாள் ஆய்வுக் கூட்டத்திற்காகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் சந்தோஷை நேரில் அழைத்து, பேசியதுடன் திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகளைப் பரிசாக வழங்கினார்.


 


 

Trending News

Latest News

You May Like