ரூ.2 லட்சம் நிதியுதவி:முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ.5 கோடியே 91 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை பத்தாயிரத்தில் இருந்து இருபது ஆயிரமாகவும், 2013 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி 11 ஆம் தேதி நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிதியுதவி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகின்ற போக்குவரத்து செலவினை தவிப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. நிதியுதவி பெறுவோரின் விவரம் - 1. பொன்.சேதமாதவன், பெரியப்பணிச்சேரி, சென்னை-128 - ரூ.25,000,2. மு.ஜீவா, பிச்சாண்டார்கோவில், திருச்சி - ரூ.25,000, 3. வேதா.உதயசூரியன், அபில்லாக், திருவல்லிக்கேணி, சென்னை - ரூ.25,000, 4. எம்.கந்தசாமி, அகரசாத்தங்குடி, திருவாரூர் - ரூ.25,000, 5. ஜி.முனீஸ்வரி,சக்கம்பட்டி, தேனி - ரூ.25,000, 6. எஸ்.ராதாகிருஷ்ணன், மருதங்குடி, மதுரை - ரூ.25,000,7. எஸ்.வீரமுத்து, கிழக்கு கொமரலிங்கம், திருப்பூர் மாவட்டம் - ரூ.25,000, 8. வி.சஞ்சய், புளுவப்பட்டு, கோவை - ரூ.25,000.