1. Home
  2. தமிழ்நாடு

119 வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ்..!

1

தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, பிரசாரத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி,  மொத்தம் உள்ள  119 தொகுதிகளுக்கும் முதல் கட்ட  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வெறும் 7 வேட்பாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 90 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், கஜ்வெல் மற்றும் கம்மா ரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

Trending News

Latest News

You May Like