1. Home
  2. தமிழ்நாடு

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு..!!

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு..!!


வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக பெரும்பாலான வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதற்காக, முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2 மணியளவில் தூத்துக்குடி வந்தடைந்தார்.

தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

Trending News

Latest News

You May Like