1. Home
  2. தமிழ்நாடு

உங்கள் தொகுதியில் முதல்வர்... நாளை திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்..!

1

மக்களவைத் தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி மாறன், வட சென்னை – கலாநிதி, ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் – செல்வம்வேலூர் – கதிர் ஆனந்த், அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை – அண்ணாதுரை, ஆரணி – தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி – மலையரசன், தருமபுரி – மணி, கோவை – கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி, சேலம் – டி.எம்.செல்வகணபதி, ஈரோடு – பிரகாஷ், நீலகிரி (தனி) – ஆ.ராசா, தஞ்சாவூர் – முரசொலி, பெரம்பலூர் – அருண் நேரு, தேனி – தங்க தமிழ்செவன், தென்காசி (தனி) – ராணி, தூத்துக்குடி – கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சி, மாநிலம், நாட்டின் நலன் கருதி சொந்த விருப்பு வெறுப்பின்றி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் 22-ம் தேதி திருச்சியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

மார்ச் 22-ம் தேதி திருச்சி, பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். 23-ம் தேதி தஞ்சாவூர் மற்றும் நாகை தொகுதிகள், 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகள், 26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகள்,மார்ச் 27- ஆம் தேதி தென்காசி, விருதுநகர், மார்ச் 29- ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, மார்ச் 30- ஆம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, மார்ச் 31- ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர், ஏப்ரல் 02- ஆம் தேதி வேலூர், அரக்கோணம், ஏப்ரல் 03- ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, ஏப்ரல் 05- ஆம் தேதி கடலூர், விழுப்புரம், ஏப்ரல் 06- ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, ஏப்ரல் 07- ஆம் தேதி புதுச்சேரி, ஏப்ரல் 09- ஆம் தேதி மதுரை, சிவகங்கை, ஏப்ரல் 10- ஆம் தேதி தேனி, திண்டுக்கல், ஏப்ரல் 12- ஆம் தேதி திருப்பூர், நீலகிரி, ஏப்ரல் 13- ஆம் தேதி கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 15- ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னை, ஏப்ரல் 16- ஆம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஏப்ரல் 17- ஆம் தேதி தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

Trending News

Latest News

You May Like