1. Home
  2. தமிழ்நாடு

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு !

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு !


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து நவம்பர் 1-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவிடும்படி, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 01/11/2020 முதல் 31/03/2021 முடிய 151 நாட்களுக்கு 417.74 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அணையிட்டுள்ளேன்.

இதனால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like