ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற சந்திப்பில் கொரோனா நடவடிக்கை குறித்தும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் முதலமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 6ஆவது முறையாக முதலமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோர் சென்றனர்.
அமைச்சர்கள் கே.பி.அன்ழகன், சி.வி.சண்முகம் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
newstm.in